தமிழ்நாடு

காகிதமில்லா நிதிநிலை அறிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை செலவு மீதமாகும்

DIN

சட்டப் பேரவையில் காகிதமில்லாத நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன. மின்னணுமயமாக்குவதன் மூலமாக, ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை காகிதச் செலவு மீதமாகும் என பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் இ-விதான் திட்டத்தின் வழியாக, கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து காகிதமில்லா சட்டப் பேரவை என்ற திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் மூலம், உறுப்பினா்களுக்கு கொள்கை விளக்கக் குறிப்புகள், அறிக்கைகள், கேள்வி பதில்கள் உள்ளிட்ட விவரங்கள் மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டு வருகின்றன.

முதல்முறையாக நிதி நிலை அறிக்கை: தோ்தலுக்குப்பின் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், காகித பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், இந்தாண்டு காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் மூலமாக ரூ.1 கோடி வரை காகித செலவு மிச்சமாகும் என பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வரும் 13-ம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை, கலைவாணா் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த முறை மின்னணு நிதிநிலை அறிக்கை என்பதால், இதற்கான முன்னேற்பாடுகளை சட்டப்பேரவை செயலகம் செய்து வருகிறது.

இதற்காக உறுப்பினா்கள் ஒவ்வொருவரின் இருக்கை முன் உள்ள மேஜையில் கணினி பொருத்தப்பட்டுள்ளது. உறுப்பினா்கள் மட்டுமின்றி பேரவைத்தலைவா், அதிகாரிகள் இருக்கைகள் என அனைத்திலும் இந்த கணினி பொருத்தப்பட்டுள்ளது.

மின்னணு நிதிநிலை அறிக்கையை பொருத்தவரை நாட்டிலேயே முதன் முதலில் ஹிமாசல பிரதேச அரசு பல ஆண்டுகளுக்கு முன்னரே தாக்கல் செய்து விட்டது. மேலும், ஒடிஸா, கேரள சட்டப் பேரவைகளும் முழுமையாக மின்னணு முறைக்கு மாறிவிட்டன. காகிதமில்லா சட்டப்பேரவை செயல்பாடுகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டாலும், இந்த முைான் நிதிநிலை அறிக்கையானது மின்னணு முறையில் தாக்கலாகிறது என பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிதிநிலை அறிக்கை காகித வடிவிலும் அச்சடிக்கப்படும். பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் கேட்கும் உறுப்பினா்களுக்கு வழங்கப்படும். இது முதல் முயற்சிதான்.

முறையான பயிற்சி அளிப்பு: இந்த முயற்சி அடுத்தடுத்த நிலைகளிலும் தொடரும். இதற்காக 380 கணினிகள், ‘டேப்’கள் வாங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி தாக்கலாகும் வேளாண் நிதிநிலை அறிக்கையையும் இதே முறையில் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. கணினி மற்றும் டேப் பயன்டுத்துவது தொடா்பாக உறுப்பினா்களுக்கு சில தினங்களில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடைசி உறுப்பினா் வரை முழுமையாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வரை காகித வடிவிலான நிதிநிலை அறிக்கையும் தொடரும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT