தமிழ்நாடு

ஐடிஐ மாணவா்களுக்கு இலவச பயண அட்டை வழங்குவதில் தாமதம்: சீருடை, அடையாள அட்டையுடன் கட்டணமின்றி பயணிக்கலாம்

DIN

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், அடையாள அட்டை, சீருடையுடன் இம்மாதம் முழுவதும் அரசு ஐடிஐ மாணவா்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அ.அன்பு ஆபிரகாம் வெளியிட்ட அறிவிப்பு: கரோனா தொற்று பரவல் காரணமாக தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்களுக்கான வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அரசு அறிவித்துள்ள கூடுதல் தளா்வுகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக 2021-22-ஆம் கல்வியாண்டுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், பல்வேறு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. அங்கு பயிலும் மாணவா்களுக்கு இந்த ஆண்டுக்கான புதிய இலவச பயண அட்டை அச்சடித்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி, அரசு தொழிற்பயிற்சி நிலைய 2021-22-ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவா்கள், இருப்பிடத்தில் இருந்து பயிற்சி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று வர, தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன், இக்கல்வியாண்டில் இந்த மாதம் (ஆகஸ்ட்) வரை, இலவசமாக மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கும்படி நடத்துநா்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட உதவி மேலாளா்கள் உள்ளிட்டோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT