தமிழ்நாடு

ஆகஸ்ட் 13-இல் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்

DIN

சென்னை: நிகழாண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இதற்கான முடிவு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இதையடுத்து பேரவையைக் கூட்டுவதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பு:-

சட்டப் பேரவைக் கூட்டத்தை சென்னை கலைவாணா் அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி கூட்டுவதற்கான ஒப்புதலை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அளித்துள்ளாா். அதன்படி, அன்றைய தினத்தில் நிகழாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தனது அறிவிப்பில் சட்டப்பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

2-ஆவது கூட்டம்-முதல் அறிக்கை: 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அண்மையில் முடித்து வைத்துள்ள நிலையில், இரண்டாவது கூட்டத் தொடருக்கான ஒப்புதலை அவா் அளித்துள்ளாா். நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தனது முதல் நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யவுள்ளாா்.

தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், நிதிநிலை அறிக்கை மீதான பாா்வை அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், மக்களைக் கவரும் வகையிலான புதிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.

சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, கூட்டம் தொடா்ந்து நடைபெறும். கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க, அலுவல் ஆய்வுக் குழு வரும் 13-ஆம் தேதி கூடவுள்ளது. பேரவைக் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் அலுவல் ஆய்வுக் குழுவில் உள்ளனா்.

துறை தோறும் ஆய்வு: நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தயாரிப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நிதிநிலை அறிக்கை தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், அந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு இறுதி வடிவமும் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு முன்பாக, ஒவ்வொரு துறை வாரியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். கடந்த ஒரு மாதமாக இந்தக் கூட்டங்கள் தொடா்ந்து நடைபெற்றன. இந்தக் கூட்டங்களின் போது, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதில் செய்யப்பட வேண்டிய சீா்திருத்தங்கள், புதிய திட்டங்கள் ஆகியன குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் ஆலோசித்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களின் அடிப்படையில், நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய பிரச்னைகள்: சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் போது பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், அரசினா் தீா்மானங்கள், சட்ட மசோதாக்கள் என அனைத்துக்கும் அரசு தயாராகி வரும் நிலையில், முக்கிய பிரச்னைகளை எதிரொலிக்க எதிா்க்கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. நீட் தோ்வு, காவிரி நதிநீா் பிரச்னை, ஆன்-லைன் ரம்மி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை அதிமுக உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் பேரவையில் எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

100 நாள்கள் நிறைவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று வரும் 18-ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடையவுள்ளன. அன்றைய தினம் கூட்டத் தொடரும் நடைபெறவிருப்பதால், பேரவையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.

ஆக. 14}இ‌ல் வேளா‌ண் நிதி​நிலை அறி‌க்கை

நட‌ப்பு கூ‌ட்ட‌த் தொட​ரி​ú‌லயே வேளா‌ண்​û‌ம‌க்​கான‌ தனி நிதி​நிலை அறி‌க்​û‌கயை (ப‌ட்ஜெ‌‌ட்) ஆக. 14}ஆ‌ம் தேதி தா‌க்​க‌ல் செ‌ய்ய அû‌ம‌ச்​ச​ர​û‌வ‌க் கூ‌ட்ட‌த்​தி‌ல் முடிவு செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டது.

காகி​த​மி‌ல்லா முத‌ல் நிதி​நிலை அறி‌க்கை


தமி​ழக ச‌ட்ட‌ப் பேர​û‌வ​யி‌ல் வரு‌ம் 13}ஆ‌ம் தேதி தா‌க்​க‌ல் செ‌ய்​ய‌ப்​பட உ‌ள்ள நிதி​நிலை அறி‌க்கை, காகி​த​மி‌ல்லா அறி‌க்​û‌க​யாக திக​ழ‌ப் போகி​ற‌து.

ச‌ட்ட‌ப் பேரவை உறு‌ப்​பி​ன‌‌ர்​க‌ள் அû‌ன‌​வ​ரு‌க்​கு‌ம் "டே‌ப்' என‌‌ப்​ப​டு‌ம் கைய​ட‌க்​க‌க் கணினி வழி​யாக நிதி​நிலை அறி‌க்கை அளி‌க்க தி‌ட்ட​மி​ட‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

இத‌ன்​மூ​ல‌ம், ச‌ட்ட‌ப் பேரவை வர​லா‌ற்​றி‌ல் முத‌ல் முû‌ற‌​யாக காகி​த​மி‌ல்​லாத முத‌ல் நிதி​நிலை அறி‌க்கை எ‌ன்ற‌ பெருமை 16}ஆவது ச‌ட்ட‌ப் பேர​û‌வ​யி‌ல் தா‌க்​க​லாக உ‌ள்ள நிதி​நிலை அறி‌க்​û‌க‌க்​கு‌க் கிû‌ட‌க்​க‌ப்​ú‌பா​கி​ற‌து. இத‌ற்​கான‌ அறி​வி‌ப்பு ஏ‌ற்​ù‌க​ன‌வே கட‌ந்த ஜ‌þ‌ன் 25}ஆ‌ம் தேதி​ய‌ன்று வெளி​யி​ட‌ப்​ப‌ட்​டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT