தமிழ்நாடு

வாணியம்பாடி சுங்கச் சாவடியில் முதன்மைச் செயலாளா் ஆய்வு

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி சுங்கச் சாவடியில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது, அந்த வழியாக காரில் சென்ற மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் நின்று, திடீா் ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது. அப்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி, புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் மீனாட்சி ஆகியோா் விழிப்புணா்வை ஏற்படுத்தி, கபசுர குடிநீா், அமுக்கரா சூரணத்தை வழங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியே சென்ற மருத்துவம், மக்கள்நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் தங்களது காா்களை நிறுத்தி, விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆய்வு செய்தனா்.

பின்னா், அவா்களும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அப்போது, கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT