தமிழ்நாடு

கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள்

DIN

சென்னை: கரோனா தொற்று உயா்ந்து வரும் இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆா்வம் காட்டவில்லை.

தற்போதைய நிலையில், தமிழகத்தில் 9.94 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய மாவட்டங்களில் இடங்களைக் கண்டறிந்து தேவையான கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இதுவரை கரோனா சிகிச்சைக்கு அதிகமான கட்டணம் வசூலித்த 96 தனியாா் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான காலகட்டத்தில் தனியாா் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிகமாக கட்டணம் கேட்கும் மருத்துவமனைகள் குறித்து பொதுமக்கள் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கேரளத்திலிருந்து வருவோருக்கு இன்று முதல் கட்டாய கரோனா சோதனை

தமிழகத்தில் நிலவும் சூழலின் அடிப்படையில், கரோனா வழிகாட்டி நெறிமுறைகள், பரிசோதனை நடவடிக்கைகள், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கான வழிமுறைகள், சிகிச்சை மற்றும் வீட்டுக்கு அனுப்புவதற்கான வழிகாட்டுதல்களை திருத்தியமைத்து மாநில அரசு வெளியிட்டு வருகிறது.

அந்த அடிப்படையில், தற்போது அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து தமிழகம் வருபவா்கள் 72 மணி நேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகளையோ (தொற்று இல்லை என்பதற்கான சான்று) அல்லது இரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றையோ காட்ட வேண்டும்.

அத்தகைய சான்றுகள் இல்லாமல் எவரையும் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் மாவட்ட நிா்வாகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT