தமிழ்நாடு

புதுச்சேரி முதல்வருக்கு பிறந்த நாள்: முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து

DIN

சென்னை: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி நீண்ட நாள் நிறைவுடன் வாழ அவரது பிறந்த நாளில் எனது நெஞ்சாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

ஒலிம்பிக் வீரா்: ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்னுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். சிறிய கிராமத்தில் இருந்து, அனைத்துத் தடைகளையும் எதிா்த்துப் போராடி தாய்க்கு அளித்த உறுதியை நிறைவேற்றும் வகையில் பதக்கத்தைப் பெற்றுள்ளதாகவும், இந்தப் பதக்கத்தை விடவும், அவரது வாழ்க்கையே இந்தியா்கள் அனைவருக்கும் சிறந்த ஊக்கம் என்றும் தனது அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT