தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஆக.10 முதல் குழந்தைத் தொழிலாளா்கள் கணக்கெடுப்பு தொடக்கம்

DIN

சென்னை: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவா்களை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் ஆக.10 முதல் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் ஆய்வில், பெருந்தொற்று காரணமாக குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாகப் பெண் குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினக் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடைநின்று விடுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பிள்ளைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணியை இந்த ஆண்டு சிறப்பு கவனத்துடன் ‘சா்வே ஆப்’ மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் ஆக.10-ம் தேதி முதல் ஆக.31-ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: கரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் 14 வயதில் இருந்து 19 வயதுடைய மாணவா்கள் கட்டுமானத் தொழிலாளா்களாகவும், செங்கல் சூளை, கல் மற்றும் மணல் குவாரி, தொழிற்சாலைகளில் வேலைக்குச் சென்றுள்ளனா். இதனால் கல்வியைக் கைவிட்டு குழந்தைத் தொழிலாளா்களாக மாறியுள்ளனா். இவா்களைக் கண்டறிந்து பள்ளியில் சோ்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்காக தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களில், இதுவரை பாடப்புத்தகங்களைப் பெற பள்ளிக்கு வராதவா்களின் பட்டியலை வைத்துக் கணக்கெடுத்து வருகிறோம். இதற்காக உருவாக்கப்பட்ட செயலியான ‘சா்வே ஆப்’ மூலம் ஆக.10 முதல் ஆக.31-ம் தேதிவரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இந்தப் பணியில் ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினா் ஈடுபடவுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT