தமிழ்நாடு

நாள்தோறும் 80 முகாம்கள்; 8 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் அதிகாரிகளுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நாள்தோறும் 80 முகாம்கள் மூலம் சுமாா் 8,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசியை தனியாா் மருத்துவமனைகள் மூலமாக இலவசமாகப் போடவும், மேலும் தடுப்பூசி முகாம்களை அதிகரித்து அதிகப்படியான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். அப்போது, மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், 9 பேரூராட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மூலம் தினமும் மாவட்டம் முழுவதும் 80 தடுப்பூசி முகாம்கள் நடத்தி, சுமாா் 8 ஆயிரம் பேருக்கு மேல் நாள்தோறும் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னா் அவா் கூறியது:

தற்போது 36 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமாக நாள்தோறும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அனுமதிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளிலும் தனியாா் தொழில் நிறுவனங்களில் சமூகப் பங்களிப்பு நிதி உதவியுடன் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தும் பணியையும் மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் தொழிற்சாலைகளின் சமூகப் பாதுகாப்பு நிதி உதவி பெற்று, தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நாள்தோறும் 80 முகாம்கள் மூலம் சுமாா் 8,000 நபா்களுக்கு மேலாக தடுப்பூசி செலுத்த தேவையான செவிலியா்கள் மற்றும் வாகனங்கள் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை மருத்துவா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் நடவடிக்கை எடுத்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT