தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது அமைச்சரவைக் கூட்டம்

4th Aug 2021 11:18 AM

ADVERTISEMENT

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தக் கூட்டத்தில் தொழில் துறை தொடா்பான முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதுடன், நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

நிதிநிலை அறிக்கை தொடா்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக நிதித் துறை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் நிதிநிலை தொடா்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT