தமிழ்நாடு

ஆக. 13ல் தமிழக பட்ஜெட் தாக்கல்

4th Aug 2021 01:07 PM

ADVERTISEMENT

சென்னை: ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்தத் தகவலை சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT