தமிழ்நாடு

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடக்கம்

4th Aug 2021 05:29 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான புறநோயாளிகள் பிரிவு மீண்டும் தொடங்கப்படுகிறது.

இது குறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான புறநோயாளிகள் மருத்துவப் பிரிவு வரும் வெள்ளிக்கிழமை ஆக.6ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை செயல்பட உள்ளது.

மனநல மருத்துவர், பால்வினை நோய் மருத்துவர், நாளமில்லா சுரப்பிகள் துறை மருத்துவர், ஒட்டுறுப்பு அறுவையியல் துறை மருத்துவர் என நான்கு சிறப்பு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்களைக் கொண்டு இந்த புறநோயாளிகள் மருத்துவப் பிரிவு செயல்படும்.

இப்பிரிவில் திருநங்கைகள் தங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெற்று பலனடையுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துக் கொண்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT