தமிழ்நாடு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

4th Aug 2021 02:47 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு,  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் நீண்ட நாள் நிறைவுடன் வாழ அவரது பிறந்தநாளில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

புதுவை மாநில முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என்.ரங்கசாமியின் 72-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
 பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காலையில் பூஜையை முடித்து, அருகே உள்ள நவசக்தி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து புதுவை சட்டப்பேரவைக்கு சென்ற அவர் அலுவல்களை கவனித்தார். தொடர்ந்து கதிர்காமம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் ரங்கசாமிக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ரங்கசாமி பிறந்த நாளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT