தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட ஒரு லட்சம்  மீன் குஞ்சுகள்

DIN


மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில்  மீன்வளத்துறை சார்பில் ஒரு லட்சம்  மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 46.20 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்கப்படுகிறது. இதற்காக அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை  கருவூட்டல் முறையில்  மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.  

மீன் குஞ்சுகள் விரலிகளாக வளர்க்கப்பட்டு மேட்டூர் நீர்த்தேக்கத்தில் விடப்படும். நடப்பாண்டில் முதல்கட்டமாக இன்று மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாப் பாளையத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. முதல் ரக ரோகு மீன் குஞ்சுகள் விரலிகளாக மேட்டூர் நீர் தேக்கத்தில் 1 லட்சம் குஞ்சுகள் விடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டலம் மீன்வளத் துணை இயக்குனர் சுப்பிரமணியன், மேட்டூர் சார் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், மேட்டூர் எம்.எல்.ஏ,சதாசிவம், மேட்டூர்  நகர செயலாளர் காசி விஸ்வநாதன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜா மீன்வள துறை சார் ஆய்வாளர்கள் கவிதா, வேலுச்சாமி மற்றும்  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT