தமிழ்நாடு

30 நாள்களுக்குப் பிறகு இடுக்கி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு

4th Aug 2021 05:32 PM

ADVERTISEMENT

 

கம்பம்: 30 நாள்களுக்கு பிறகு தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு,  ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரளத்தில் கரோனா பரவல் அதிகம் வருவது காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் இருந்து கேரளம் வருபவர்களிடம் கடும் கெடுபிடிகளும், கேரள பகுதியில் சனி, ஞாயிறு இரண்டு நாள் பொது முடக்கமும், மேலும் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தையும் அரசு அறிவித்தது.

புதன்கிழமை முதல் பொதுமுடக்கத்தில் தளர்வு கொடுக்கப்பட்டு, சனி மற்றும் ஞாயிறு  இரண்டு நாள்கள் பொதுமுடக்கம் இருந்ததை, தளர்த்தி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என  கேரள அரசு அறிவித்தது. இதனால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT