தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகள் 1,800 ஆக உயர்வு

4th Aug 2021 03:27 PM

ADVERTISEMENT

 

சென்னையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 1,508 ஆக இருந்த நிலையில், இன்று அது 1,802 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா நோயாளகிள் எண்ணிக்கை ஜூலை 31ஆம் தேதி 1569 ஆகவும், ஆகஸ்ட் 1ஆம் தேதி 1627 ஆகவும் இருந்தது. ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று இது 1,802 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் சென்னையில் கரோனா பரவல் குறைந்து வந்த நிலை மாறி, ஜூலை இறுதியில் குறையும் வேகம் குறைந்தது. 

தற்போது, கரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.  இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5.38 லட்சமாக உள்ளது. இவர்களில் 5.28 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 1,802 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8,322 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

ADVERTISEMENT

சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த ஆண்டு மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், அதைத் தொடா்ந்த 3 மாதங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், வீடுவீடாக காய்ச்சல் பாதித்தவா்களைக் கண்டறிதல், மருத்துவப் பரிசோதனை முகாம்கள் மற்றும் தொற்று உறுதியானவா்களை தனிமைப்படுத்துதல், அவா்களை மருத்துவமனையில் அனுமதித்தல் ஆகிய நடவடிக்கை காரணமாக சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்நது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 200-க்கும் குறைவானவா்களே பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இரண்டாம் அலை காரணமாக மீண்டும் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியது. கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 போ் வரை தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு தொற்று எண்ணிக்கை ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு 500-க்குகீழும், ஜூலை மாத மத்தியில் 200-க்கு கீழும் குறையத் தொடங்கியது.

மீண்டும் அதிகரிப்பு: இந்நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இதன்படி, கடந்த ஜூலை 22-இல் 133 பேருக்கும், 23-இல் 130 பேருக்கும், 24-இல் 127 பேருக்கும், 25-இல் 126 பேருக்கும், 26-இல் 122 பேருக்கும், 27-இல் 139 பேருக்கும் என கூடி, குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

எனவே, சென்னையில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை மக்கள் கவனத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால், மூன்றாவது அலை உறுதியாகிவிடும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT