தமிழ்நாடு

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி: இருவர் கைது

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.2 கோடி வரையில் மோசடி செய்ததாக சகோதரர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.

   இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை தரப்பில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் சத்தியராஜ்(29). இவரது நண்பர்களான கண்ணாபிரான் முருகன், பாலாஜி, சீனிவாசன் ஆவர். இவர்கள் படிதது விட்டு வேலையில்லாமல் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ், வெங்கடேசன், பாலாஜி, அரவிந்த், ராகுல் ஆகியோர் அணுகியதோடு, ரயில்வே துறையில் உயர் அதிகாரிகளை தெரியும் எனக் கூறியதோடு வேலை வாங்கி தருவதாகவும்   தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய நிலையில் தலா ரூ.2.50 லட்சம் பெற்று கொடுத்தார்களாம். இதையடுத்து நம்பும் வரையில் நியமன ஆணை மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கியுள்ளனர். இதையடுத்து விசாரித்ததில் போலியாக தயார் செய்து வழங்கி ஏமாற்றியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் 40 பேரிடம் ரூ.2 கோடி வரையில் ஏமாற்றியுள்ளனர்.

   இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் மனு அளித்தனர். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அசோகன், காவல் ஆய்வாளர் லில்லி ஆகியோர் வழக்கு பதிந்து சகோதரர்கள் அரவிந்த் (24), ராகுல்(26) ஆகியோரை கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவான புஷ்பராஜ், வெங்கடேசன் மற்றும் பாலாஜி குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT