தமிழ்நாடு

கம்பம், கூடலூர் கோயில்கள், சுருளி அருவியிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கோயில்கள் அடைக்கப்பட்டது, செவ்வாய்கிழமை சுருளி அருவிக்கு பக்தர்கள் வருவதை தடுத்து காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆண், பெண் பக்தர்கள் திரளாக கூடுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா தொற்றை  முன்னிட்டு அருவி பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் சுருளி அருவி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் கரோனா தொற்று  பரவல் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டன, மேலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுருளி அருவிக்கு வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ராயப்பன்பட்டி காவலர்கள் அருவி மற்றும் கரையோர பகுதிகளுக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பினர். இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.

கம்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அடைக்கப்பட்டதால் ஆண், பெண் பக்தர்கள் அடைக்கப்பட்ட கதவு அருகே வழிபாடுகள் செய்தனர்.

இதேபோல் கூடலூர் சுந்தரவேலவர், லோயர் கேம்ப் வழிவிடும் முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பிரதமரின் சா்ச்சை பேச்சு: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் ஆா்.எஸ்.பாரதி

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

SCROLL FOR NEXT