தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு: தடை உத்தரவால் வெறிச்சோடிய மேட்டூர் காவிரிக்கரை

DIN

ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் காவிரியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால் மேட்டூரில் காவிரிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. 

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் புனிதநீராட ஆயிரக் கணக்கானோர் மேட்டூரில் கூடுவார்கள். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக மேட்டூருக்கு வருவது வழக்கம். கிராமமக்கள் தங்களின் குலதெய்வங்களின் உருவச்சிலைகளை மேளதாளம் முழங்க வானவெடிகள் வெடிக்க தலைச்சுமையாக கொண்டுவந்து மேட்டூர் காவிரியில் நீராட்டி எடுத்துச்செல்வர்கள்.

மேட்டூர் அணையை காக்கும் காவல் தெய்வமான அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிடுவார்கள். பின்னர் அணை பூங்காவிற்குச் சென்று உறவினர்களுடன் விருந்து உண்டு மகிழ்ந்து செல்வார்கள். முதல் நாள் இரவு முதலே மேட்டூருக்கு மக்கள் கூட்டம் வரத் தொடங்கும் பல பகுதிகளிலிருந்தும் மேட்டூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதனால் மேட்டூரில் மக்கள் கூட்டம் அதிகரித்து விழாக்கோலம் பூண்டிருக்கும். ரங்கராட்டினம், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொழுபோக்கு விளையாட்டுகளும் ஏராளமான கடைகளும் அமைக்கப் பட்டிருக்கும்.

ஆனால் ஆடிப்பொருக்கு நாளான இன்று கரோனா பரவலை கட்டுப்படுத்த காவிரியில் நீராடுவதற்கும், அணை பூங்காவிற்கு செல்லவும் அணைக்கட்டு முனியப்பன் ஆலயத்தில் மக்கள் கூட்டம் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை காரணமாக காவேரிபாலம், நான்கு ரோடு, அணைக்கட்டு முனியப்பன் கோவில் பகுதிகளில் காவலர்கள் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் காவியில் குளிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திகடன் செலுத்த வந்தவர்களும் நேர்த்திகடன் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். ஆடிப்பெருக்கில் மேட்டூரில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள். கரோனா தடை காரணமாக மக்கள் கூட்டமின்றி மேட்டூர் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேட்டூர் அணை பூங்கா, முனியப்பன் கோவில் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முனியப்பன் கோவில் பகுதியில் நுழைய முடியாதபடி தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT