தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்கியது

2nd Aug 2021 05:11 PM

ADVERTISEMENT

தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் சட்டப் பேரவை நூற்றாண்டு விழா தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா்.

மேலும், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் உரையாற்றுகின்றனா். விழாவின் நிறைவாக, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி நன்றி கூறுகிறாா்.

முன்னதாக பேரவைத்தலைவர் அப்பாவு வரவேற்புரையாற்றினார். பேரவையில் 16-வது தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறந்துவைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு மாலை 6.15 மணிக்கு ஆளுநா் மாளிகைக்குச் செல்லும், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், செவ்வாய்க்கிழமை (ஆக.3) காலை சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை சென்று அங்கிருந்து உதகமண்டலம் செல்ல உள்ளாா்.

 

Tags : சட்டப்பேரவை Ramnath govind
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT