தமிழ்நாடு

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு: மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது

2nd Aug 2021 09:01 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நாகை மீனவர் ஒருவர் காயமடைந்தார். 

நாகையை அடுத்த  கீச்சாங்குப்பம பகுதியை சேர்ந்தவர் கௌதமன். இவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் நாகை அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 28 ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

இதையும் படிக்கலாமே தனி நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயருமா?

அவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பரப்பு அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் நாகை மீனவர்ளின் படகை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் நாகை மீனவர் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த எ. கலைச்செல்வன்(33) என்பவரின் தலையில் காயம் ஏற்பட்டது. 

ADVERTISEMENT

இதையடுத்து நாகை மீனவர்கள் திங்கட்கிழமை காலை கரை திரும்பினர். உடனடியாக கலைச்செல்வன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நாகை மீனவர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Tags : fishermen
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT