தமிழ்நாடு

சென்னை மக்களே எச்சரிக்கை.. மீண்டும் அதிகரிக்கிறது கரோனா பாதிப்பு

2nd Aug 2021 11:50 AM

ADVERTISEMENT


சென்னையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 1,508 ஆக இருந்த நிலையில், இன்று அது 1,675 ஆக உயர்ந்துள்ளது.

இது ஜூலை 31ஆம் தேதி 1569 ஆக உயர்ந்த நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதியான நேற்று 1627 ஆனது. ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று இது 1675 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் சென்னையில் கரோனா பரவல் குறைந்து வந்த நிலை மாறி, ஜூலை இறுதியில் குறையும் வேகம் குறைந்து போனது. 

தற்போது, கரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.  இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5.38 லட்சமாக உள்ளது. இவர்களில் 5.28 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 1,675 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8,318 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

ADVERTISEMENT

சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த ஆண்டு மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், அதைத் தொடா்ந்த 3 மாதங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், வீடுவீடாக காய்ச்சல் பாதித்தவா்களைக் கண்டறிதல், மருத்துவப் பரிசோதனை முகாம்கள் மற்றும் தொற்று உறுதியானவா்களை தனிமைப்படுத்துதல், அவா்களை மருத்துவமனையில் அனுமதித்தல் ஆகிய நடவடிக்கை காரணமாக சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்நது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 200-க்கும் குறைவானவா்களே பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இரண்டாம் அலை காரணமாக மீண்டும் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியது. கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 போ் வரை தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு தொற்று எண்ணிக்கை ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு 500-க்குகீழும், ஜூலை மாத மத்தியில் 200-க்கு கீழும் குறையத் தொடங்கியது.

மீண்டும் அதிகரிப்பு: இந்நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன்படி, கடந்த ஜூலை 22-இல் 133 பேருக்கும், 23-இல் 130 பேருக்கும், 24-இல் 127 பேருக்கும், 25-இல் 126 பேருக்கும், 26-இல் 122 பேருக்கும், 27-இல் 139 பேருக்கும் என கூடி ,குறைந்து வந்த நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து புதன்கிழமை (ஜூலை 28) 164 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 7 நாள்களில் 790 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

எனவே, சென்னையில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை மக்கள் கவனத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால், மூன்றாவது அலை உறுதியாகிவிடும்.
 

இதையும் படிக்கலாமே.. ஆன்லைன் வகுப்புகள்: ஏமாற்றாதே... ஏமாறாதே... ஆசிரியரின் குரல்

தமிழகத்திலும் கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை 1,990- ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 230 பேருக்கும், ஈரோட்டில் 180 பேருக்கும், சென்னையில் 175 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 2,156 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 20,524 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 26 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,102-ஆக அதிகரித்துள்ளது.

Tags : coronavirus chennai update chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT