தமிழ்நாடு

இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர் கருணாநிதி: குடியரசுத் தலைவர்

2nd Aug 2021 06:07 PM

ADVERTISEMENT

இந்தியத் தலைவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார். 

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

படிக்க தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய பேரவை நூற்றாண்டு விழா

பின்னர் பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி தமிழில் தமது உரையை அவர் தொடங்கினார். 

ADVERTISEMENT

அப்போது அவர் பேசியதாவது, கருணாநிதியின் படத்தை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

படிக்க| சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது: ஆளுநர் உரை

தமிழ் இலக்கியத்திலும், தமிழக அரசியலிலும் முக்கியப் பங்காற்றியவர். புரட்சிகரமான கருத்துகள் மூலம் சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். 

சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு மாலை 6.15 மணிக்கு ஆளுநா் மாளிகைக்குச் செல்லும், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், செவ்வாய்க்கிழமை (ஆக.3) காலை சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை சென்று அங்கிருந்து உதகை செல்ல உள்ளாா்.

Tags : DMK சட்டப்பேரவை Ramnath govind
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT