தமிழ்நாடு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கின் தீர்ப்பு வரும் ஆக.4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2nd Aug 2021 01:01 PM

ADVERTISEMENT

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கின் தீர்ப்பை வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி  கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சுப்பையாவின் உறவினர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் போலீஸார், அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்குரைஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த  ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேரை கைது செய்தனர். 

இதையும் படிக்கலாமே | சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் ஆகஸ்ட் 2 -ஆம்  தேதி தீர்ப்பளிப்பதாக அறிவித்திருந்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு  நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. போது, அப்போது குற்றம்சாட்டப்பட்ட மேரிபுஷ்பம், பொன்னுசாமி ஆகியோர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

Tags : DrSubbaiah murder case high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT