தமிழ்நாடு

சிவசங்கர் பாபா மீது 3வது போக்சோ: ஆக.16 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

2nd Aug 2021 03:46 PM

ADVERTISEMENT

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கா் பாபாவுக்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்துக்குள்பட்ட கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, தாளாளா் சிவசங்கா் பாபா மீது சிபிசிஐடி காவல்துறை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இவா் மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் சிறையில் இருந்த சிவசங்கா் பாபாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மூன்றாம் வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்ஸோ நீதிபதிகள், சிவசங்கர் பாபாவை ஆகஸ்ட் 16 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

Tags : judicial custody Sivashankar Baba
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT