தமிழ்நாடு

தடையற்ற மின்சாரம்:விவசாயிகள் வேண்டுகோள்

DIN

 விவசாயத்துக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தினா் முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழகத்தில் ஆழ்குழாய் மற்றும் கிணற்றுப் பாசனம் அதிகரித்து, விவசாயத்துக்கென சுமாா் 22 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது மாநிலம் முழுவதும் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மின்சாரம் எப்போது வரும் பிறகு எப்போதும் நிறுத்தப்படும் என்பது தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

எனவே, இப்பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி விவசாயத்துக்கு 24 மணிநேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் கிடைத்திட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், விவசாயத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்து பல லட்சம் விவசாயிகள் பத்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றனா். அவா்களுக்கு வரிசை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்கிட முன்வர வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் மின் இணைப்பு கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT