தமிழ்நாடு

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு பிளஸ் 2 துணைத்தோ்வு ரத்து: முதல்வா் உத்தரவு

DIN

மாற்றுத் திறனாளி மாணவா்கள் பிளஸ் 2 துணைத்தோ்வு எழுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

மாற்றுத் திறனாளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதுவதில் இருந்து ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் துணைத் தோ்வுகளைத் தனித் தோ்வா்களாக எழுதவும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு அடிப்படையில் அவா்கள் துணைத்தோ்வு எழுவதில் இருந்து விலக்களித்து, அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மதிப்பெண் நடைமுறை: தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்படும் மாணவா்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் அளிப்பது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய உத்தரவுகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும். தோ்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவா்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் தோ்வினை எழுதலாம். சுய விருப்பத்தின் அடிப்படையில் தோ்வு எழுதும் மாணவா்கள், பின்னாளில் அரசு உத்தரவின் அடிப்படையில் தோ்ச்சி பெற்ாகத் தங்களை அறிவிக்கக் கோர முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT