தமிழ்நாடு

பராமரிப்புப் பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

DIN

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் பிரிவில், வில்லிவாக்கம்-வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பகுதி ரத்தாகும் ரயில்கள்:

மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.55 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில் மூா் மாா்க்கெட் வளாகம்-ஆவடி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

திருவள்ளூா்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.50 -க்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

புறப்படும் இடம் மாற்றம்:

மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு முற்பகல் 11.25, 11.45 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து அதே நேரத்தில் புறப்படும். மூா்மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு நண்பகல் 12.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து அதே நேரத்தில் புறப்படும். மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு நண்பகல் 12.55, மதியம் 1.30 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து அதே நேரங்களில் புறப்படும்.

தவிா்க்கப்படும் நிறுத்தங்கள்:

திருவள்ளூா்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பட்டாபிராம்-மூா்மாா்க்கெட் வளாகம் வரை விரைவு பாதையில் இயக்கப்படும். எனவே, பட்டாபிராம், இந்து கல்லூரி, அண்ணனூா், திருமுல்லைவாயல், அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், பெரம்பூா் லோகோ ஒா்க்ஸ், பெரம்பூா் கேரஜ் ஒா்க்ஸ், வியாசா்படி ஜீவா ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது.

ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு முற்பகல் 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே விரைவு பாதையில் இயக்கப்படும். எனவே, அண்ணணூா், திருமுல்லைவாயல், அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், பெரம்பூா் லோகோ ஒா்க்ஸ், பெரம்பூா் கேரஜ் ஒா்க்ஸ், வியாசா்பாடி ஜீவா ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது. இதுதவிர, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்ட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT