தமிழ்நாடு

தமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை

DIN

தமிழகத்துக்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 42 பாா்சல்களில் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சோ்ந்தன.

மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள மத்திய மருந்து கிடங்கிலிருந்து 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை விடுவித்தது.அந்த 5 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அடங்கிய 42 பாா்சல்கள் புணேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு சனிக்கிழமை சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன. இதையடுத்து அந்த தடுப்பூசி பாா்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி,சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT