தமிழ்நாடு

ட்விட்டர் மூலமாக ஆக்சிஜன், படுக்கை வசதி பெறலாம்: தமிழக அரசு தகவல்

30th Apr 2021 01:49 PM

ADVERTISEMENT

கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களை மக்கள் எளிதாகப் பெற தமிழக அரசு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தைத் தொடங்கவுள்ளது. 

இதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள படுக்கைகளை அறியவும்  வெண்டிலேட்டர், ஆக்சிஜன் உதவி கோரவும் முடியும். 

ஏற்கெனவே ஆக்சிஜன் உதவி பெற 104 என்ற இலவச உதவி எண்ணை அறிமுகப்படுத்திய தமிழக அரசு @104GoTN என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கினை தொடங்கவுள்ளது. 

இந்த ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை, ஆச்சிஜன் வசதி குறித்து மக்கள் யார் வேண்டுமானாலும் கோரிக்கை விடுக்காம்.  #BedsForTN என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உதவி கோரலாம். 

ADVERTISEMENT

அதேபோல காலியாக உள்ள படுக்கைகள் வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனைகளும் வழங்கலாம். 

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் தேவைப்படுவோருக்கு தகவல் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகளும், மக்களும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT