தமிழ்நாடு

அருமை தொழிலாளர்களுக்கு மே நாள் வாழ்த்து: முதல்வர் பழனிசாமி

30th Apr 2021 02:32 PM

ADVERTISEMENT

 

சென்னை:  எனது அருமை தொழிலாளர்களுக்கு எனது மனமார்ந்த “மே நாள்” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மே நாள்” வாழ்த்துச் செய்தியில், உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் உன்னத தினமான மே 1-ஆம் தேதி நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த “மே நாள்” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே நாள் கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது அருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த “மே நாள்” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT