தமிழ்நாடு

திமுக ஆட்சி என்றைக்கும் தொழிலாளர்களின் ஆட்சி: மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து

30th Apr 2021 08:42 PM

ADVERTISEMENT

திமுக ஆட்சி என்றைக்கும் தொழிலாளர்களின் ஆட்சி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மே நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வரலாற்றுப் புகழ் பெற்ற சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பிரமாண்டமான பேரணியை நடத்தி - தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவு கூரும் மே 1-ஆம் தேதியன்று திமுகவின் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  திமுக - என்றைக்கும் தொழிலாளர்களின் உற்ற தோழனாக - அவர்களின் உரிமைக்குரலை எழுப்பும் உயிர் மிகு நண்பனாகத் தொய்வின்றி பாடுபட்டு வந்திருக்கிறது. 
தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் இனிமையாக்கிட - அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கிட எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர். திமுக ஆட்சி என்றைக்கும் தொழிலாளர்களின் ஆட்சி! ஆளுங்கட்சியாக இருக்கும் போது நலத் திட்டங்கள், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர்களோடு இணைந்து நின்று போராடி - அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தட்டிக் கேட்கும் ஒரே மாபெரும் இயக்கம் திமுக. 
வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் முன்பே நிறைவேற்றிக் கொடுத்து மகிழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். “தொழில் அமைதி” மட்டுமே தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம் திமுக என்பதால் - தொழிலாளர்களை தன் உற்றமிகு தோழனாகவே கருதிப் பாடுபட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : DMK MKStalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT