தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கக் கூடாது: எதிர்ப்பாளர்கள் கருப்புக் கொடி கட்டி கண்டனம்

29th Apr 2021 11:09 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கக் கூடாது என்று எதிர்ப்பாளர்கள் தங்களின் வீட்டுகளுக்கு முன் தடை ஸ்டெர்லைட் என கோலமிட்டும், கருப்புக் கொடி கட்டியும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

நாட்டில் தற்போது நிலவும் பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள தேசிய அளவிலான ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள பிராண வாயு தயாரிக்கும் அலகை மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேதாந்தா நிறுவனம் வருங்காலத்தில் முழு ஆலையையும் இயக்க இந்த உத்தரவை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த உத்தரவானது, தற்போதைய மருத்துவ ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தூத்துக்குடியில் வியாழக்கிழமை கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்

தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி பண்டாரம் பட்டி, மீளவிட்டான், குமாரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தங்கள் வீடுகளின் முன்பு எதிர்ப்பாளர்கள் ஸ்டெர்லைட் தடை செய் என கோலமிட்டும், கருப்புக்கொடி கட்டியும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Tags : Sterlite plant black flag hoisting oxygen production
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT