தமிழ்நாடு

கரோனா அச்சம்:  நடிகர்கள், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்

29th Apr 2021 11:46 AM

ADVERTISEMENT


கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக நடிகர்கள், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இதுவரை தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை 1 லட்சத்து 30 ஆயிரத்து 42 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 16,665 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 452 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 

கரோனா தொற்றினால் புதன்கிழமை 98 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,826 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 32 போ் உயிரிழந்துள்ளனா். சென்னையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,661 ஆக உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக நடிகர்கள், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

அதிகளவில் பணியாளர்களை கொண்டு படப்பிடிப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 

Tags : filming halted Corona fears Actors Suriya
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT