தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மறைவு: ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்

29th Apr 2021 08:57 PM

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் அமைச்சர் டாக்டர் செ.அரங்கநாயகம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வநத் நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
ஆரம்பகால அதிமுக உடன்பிறப்பு டாக்டர் அரங்கநாயகம், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பணிகள் சம்பந்தமாக நேரில் சந்தித்துப் பேசுபவர்களில் இவரும் ஒருவர்.
அதிமுக தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கட்சிப் பணிகளை ஆற்றியுள்ள அன்புச் சகோதரர் டாக்டர் அரங்கநாயகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது அன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 91.  இவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT