தமிழ்நாடு

வைத்தீஸ்வரன் கோயிலில் ஏப். 29 ஆம் தேதி குடமுழுக்கு; பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு

27th Apr 2021 11:29 AM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. 

வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி வீற்றிருக்கிறார். 

இந்நிலையில், குடமுழுக்கை பக்தர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே தொலைக்காட்சி அல்லது யூட்யூப் மூலமாக கண்டுகளித்து இறைவன் ஆசி பெற வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அறிவிப்பு

வருகிற 29 ஆம் தேதி(வியாழக்கிழமை) காலையில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. தமிழக அரசு மற்றும் நீதிமன்றம் அளித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும். பக்தர்கள் தொலைக்காட்சிகளிலும், யூட்ட்யூப் தளத்திலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கை பக்தர்கள் தங்கள் இல்லத்திலிருந்தே கண்டு கரோனா இந்த உலகத்திலிருந்து நீங்க வேண்டுமென பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT