தமிழ்நாடு

காரியாபட்டி அருகே 3 பேர் விஷம் கலந்த உணவை உண்டு உயிரிழப்பு

27th Apr 2021 10:59 AM

ADVERTISEMENT


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முஸ்டக்குறிச்சியில் குடும்ப பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் கலந்த உணவை உண்டதில் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி சேர்ந்தவர் அடைக்கலம் (78), இவரது மகள் முனியம்மாள் (45), பேத்தி ஜெயலலிதா (17). இதில் பாட்டி அடைக்கலம் மட்டும் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டருகே மகளும் பேத்தியும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவை, தனது அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர்.

அவருக்கு 18 வயது முடிந்தவுடன் திருமணம் முடிக்க முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் முனியம்மாள் உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தாராம். மேலும் அடைக்கலத்திற்கும் முனியம்மாளுக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு அடைக்கலம் முனியம்மாள் ஜெயலலிதா ஆகிய மூவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளனர். காலையில் அடைக்கலம் வீட்டு கதவு திறக்கப்படாதது கண்டு அருகில் வசிப்போர் பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரிந்தது.

மேலும் முனியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரும், மகள் ஜெயலலிதாவும் உயிரிழந்திருப்பது தெரிந்தது. தகவலறிந்த ஆவியூர் காவலர்கள், மூன்று பேரது சடலத்தை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT