தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி பலத்த பாதுகாப்பு 

26th Apr 2021 09:32 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் நிலையில், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்று அதிகரிப்பால், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பலரும் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் உரிய நேரத்தில் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகியுள்ளது. 

இந்த நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையானது ஆக்சிஜன் உற்பத்தி செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. விசாரணையின்போது, ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

மேலும் இது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

அதேசமயம் இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டமும் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : Sterlite
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT