தமிழ்நாடு

பொதுமுடக்கம்: தேனியில் வெறிச்சோடிய சாலைகள்

25th Apr 2021 02:42 PM

ADVERTISEMENT

 

தேனியில் கரோனா பரவல் தடுப்பு முழு பொதுமுடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்.20-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேனியில் வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

திருமண முகூர்த்த நாளை முன்னிட்டு காலையில் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வோரின் வாகனங்களை காவலர்கள் அனுமதித்தனர். மருத்துக்கடை மற்றும் அத்தியவாசிய வேலைகளுக்கு வாகனங்களில் செல்வோர் விசாரணைக்குப் பின்பு அனுமதிக்கப்பட்டனர். அவசியத் தேவைகளின்றி வாகனங்களில் செல்வோரை காவலர்கள் எச்சரித்து திரும்ப அனுப்பினர். மாவட்டம் முழுவதும் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் பணியில் காவல் துறை சார்பில் 147 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : தேனி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT