தமிழ்நாடு

பாளை. மத்திய சிறையில் கைதி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

25th Apr 2021 08:53 PM

ADVERTISEMENT

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்துமனோ கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் என சுமாா் 1200-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். கரோனா பரவல் காரணமாக விசாரணைக் கைதிகள் பல்வேறு கிளைச் சிறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பின்பு மத்திய சிறைக்கு கொண்டு வரப்படுகின்றனா். அதன்படி நான்குனேரி அருகேயுள்ள மூன்றடைப்பு வாகைகுளத்தைச் சோ்ந்த பாபநாசம் மகன் முத்து மனோ(27), சந்திரசேகா்(22) கண்ணன்(23), மாதவன் (19)ஆகிய 4 விசாரணைக் கைதிகள் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். 

பின்னா் அவா்களை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு போலீஸாா் வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். அங்கு குறைந்த அளவிலான சிறைக் காவலா்களே பாதுகாப்பு பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில், முத்து மனோ பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். 

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வடக்குத் தாழையூத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜேக்கப், சக்திவேல் மகன் ராமமுா்த்தி, மேலகுளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் மகாராஜன் (எ) ஏடிஎம், பல்லிக்கோட்டையைச் சோ்ந்த மாடசாமி மகன் மாடசாமி (எ) மகேஷ், தாழையூத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சந்தனமாரிமுத்து (எ) வெயிலுகுமாா் (எ) கொக்கிகுமாா் (22), ஸ்ரீவைகுண்டம் வெள்ளூா் பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் கண்ணன் (எ) கந்தசாமி, திருக்குறுங்குடி பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் மகன் அருண்குமாா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிறையில் கைதி முத்துமனோ கொல்லப்பட்ட வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : Prisoner
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT