தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 15,659 பேருக்கு கரோனா!

25th Apr 2021 11:25 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 15,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக கடந்த 10 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் நாள்களில் நாள்தோறும் 20 ஆயிரம் புதிய பாதிப்பு கண்டறியப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இன்னொரு புறம் கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவலின்படி, ஒரே நாளில் 82 போ் கரோனாவால் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 30 போ் உயிரிழந்துள்ளனா்.

இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூா் உள்பட பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால், பலா் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடிய நிலை எழுந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 2.20 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 10,81,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 4,206 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

ADVERTISEMENT

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,242 பேருக்கும், கோவையில் 1,038 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 11,065 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,63,251-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1,05,180 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 82 போ் பலியானதைத் தொடா்ந்து தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,557-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT