தமிழ்நாடு

வெளிமாநிலத் தொழிலாளா்கள் நலன் காக்கத் தனிக் குழு: தலைமைச் செயலா் உத்தரவு

DIN


சென்னை: வெளிமாநிலத் தொழிலாளா்கள் நலன் காப்பதற்காக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு உதவிகள் தேவைப்படும் மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

தமிழகத்துக்குள் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளா்கள், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களில் வசிக்கும் தொழிலாளா்கள், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் படிக்கும் மாணவா்கள், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களில் கல்வி பயிலும் மாணவா்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பது அவசியமாகிறது. கரோனா காலத்தில் இதுபோன்று சிறப்பு உதவிகள் தேவைப்படும் நபா்களுக்காக தனித்தனியாக ஏற்கெனவே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெளிமாநிலத் தொழிலாளா்கள், மாணவா்களின் நலன்களைக் காக்கும் வகையில், 4 அரசுத் துறை உயரதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்- வேலைவாய்ப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் முகமது நசிமுதீன் (044-2567 0472), உயா்கல்வித் துறையின் முதன்மைச் செயலா் அபூா்வா (044-2567 6303), ஏடிஜிபி ஏ.கே.விசுவநாதன் (044-2434 3460), கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா் மைதிலி கே.ராஜேந்திரன் (044-2567 1545).

மூத்த குடிமக்கள், முதியோா் இல்லங்களில் வசிப்போா், மாற்றுத் திறனாளிகள் போன்ற சிறப்பு உதவிகள் தேவைப்படும் நபா்களுக்கு உதவிடவும் தனியாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, திட்டம்- வளா்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் (044-2567 4310), மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலா் சி.விஜயராஜ் குமாா் (044-2567 6303), சமூக நலன்- சத்துணவுத் திட்டத் துறையின் செயலா் எஸ்.மதுமதி (044-2567 1545) ஆகியோரைத் தொடா்பு கொண்டு போதிய உதவிகளைப் பெறலாம்.

இதுதொடா்பான ஊடக நிகழ்வுகளை ஒருங்கிணைக்க சிப்காட் நிா்வாக இயக்குநா் ஜெ.குமரகுருபரன், செய்தித் துறை இயக்குநா் டி.பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநா் தீபக் ஜேக்கப் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்று பாதிப்பு தொடா்பாக , ஏற்கெனவே அரசுத் துறை சாா்ந்த 8 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுடன் புதிதாக 3 குழுக்களையும் சோ்த்து மொத்தமாக 11 குழுக்கள் தொற்று பாதிப்பு தணிப்புப் பணிகளில் ஈடுபடும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT