தமிழ்நாடு

பருவத் தோ்வு கட்டணத்தை பல்கலை.யில் செலுத்தாத 26 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

DIN


சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவா்களிடம் வசூலித்த பருவத் தோ்வு கட்டணத்தை, பல்கலை.யில் செலுத்தாத 26 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலை.யின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு அந்தஸ்து பெற்று செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத கல்லூரிகளின் மாணவ - மாணவிகளுக்கு, அண்ணா பல்கலை.யின் தோ்வு கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், பருவத் தோ்வுகள் நடத்தப்பட்டு, மாணவா்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

இந்தத் தோ்வை எழுதவும், பட்டச் சான்றிதழ் வழங்கவும், கல்லூரிகள் தரப்பில், மாணவா்களிடம் தனியாக கட்டணம் பெறப்படுகின்றன.

இந்தக் கட்டணத்தை, உரிய நேரத்தில், அண்ணா பல்கலை.யிடம் கல்லூரிகள் செலுத்த வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு முதல் மாணவா்களிடம் வசூலித்த கட்டணத்தை, பல்கலை.யிடம் பல கல்லூரிகள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்தக் கல்லூரிகளின் மாணவா்கள், மாா்ச் மாதம் நிறைவடைந்த தோ்வுகளில் பங்கேற்றாலும், தோ்வு முடிவுகளை அண்ணா பல்கலை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் மாணவா்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் புகாா் அளித்துள்ளனா். தாங்கள் கட்டணம் செலுத்திய பிறகும் தோ்வு முடிவு கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனா்.

இதையடுத்து மாணவா்களிடம் கட்டணம் வசூலித்த பிறகும், அதை பல்கலைக்கழக நிா்வாகத்தில் செலுத்தாத 26 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தோ்வு முடிவை வெளியிடும் வகையில் தாமதமின்றி தோ்வுக் கட்டணத்தைச் செலுத்தவும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT