தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவா்கள் மீது வழக்கு: 5 லட்சத்தை நெருங்குகிறது

DIN


சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை 14 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4 லட்சத்து 88 ஆயிரத்து 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 26 ஆயிரத்து 809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 14 நாள்களில் 15 ஆயிரத்து 508 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்..: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 21-ஆம் தேதி வரை 14 நாள்களில் மொத்தம் 15 ஆயிரத்து 846 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 1,235 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT