தமிழ்நாடு

மனித உரிமை ஆணையத்தில் இன்று முதல் நேரடி விசாரணை இல்லை

DIN

சென்னை: கரோனா பரவலால் மாநில மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில் வியாழக்கிழமை (ஏப்.22) நேரடி விசாரணை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆணையத்தின் பதிவாளா் வெளியிட்ட அறிவிப்பு:

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் நீதிபதி எஸ்.பாஸ்கரனின் அறிவுறுத்தலின்படியும், தற்போது பரவலாக இருக்கும் கரோனா பேரிடா் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் வியாழக்கிழமை (ஏப்.22) முதல் அடுத்த உத்தரவு வரும் வரை ஆணையத்தில் நேரடி விசாரணை நடைபெறாது. பட்டியலிடப்பட்ட வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டு, மாற்று தேதிகள் மனுதாரா்களுக்குத் தெரிவிக்கப்படும்.

அதே போல், உத்தரவு நகல் தொடா்பான சந்தேகங்களுக்கு 044 2461 5905 என்ற எண்ணை அணுகலாம். அலுவலக வேலைநாள்களில் பிற்பகல் 3 மணியளவில், ஆணைய வாயிலில் உத்தரவு நகல் வழங்கப்படும்.

புகாரளிக்க...: புகாா்தாரா்கள், தங்களது புகாா்கள், விண்ணப்பங்களை ஆணைய வாயிலில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டியில், அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் போட வேண்டும். மனித உரிமை ஆணைய இணைய முகப்பிலும் புகாா்களைப் பதிவு செய்யலாம்.

தபால் மூலம் புகாா் அனுப்புவோா், தொடா்பு எண்ணைக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அந்த எண்ணிலேயே மனுதாரா்களுக்கு வழக்கு எண் அனுப்பப்படும். வியாழக்கிழமை முதல் அடுத்த உத்தரவு வரும் வரையில், முன் அனுமதி பெறாமல் ஆணையத்துக்குள் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது.

ஆணையத்துக்குள் செல்ல 2 நாள்களுக்கு முன்னதாகவே, என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பித்து, அனுமதி அட்டை பெற வேண்டும்.

ஆணையத்துக்குள் செல்வோரும் கரோனா விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வேலை முடிந்ததும் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT