தமிழ்நாடு

இரு சக்கர வாகன தயாரிப்பின்போதே வேகக் கட்டுப்பாட்டுகருவிகளை கட்டாயமாக்க வேண்டும்உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும்போது வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 28 வயது பெண் பல் மருத்துவா், 2013-ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதில் பெண் பல் மருத்துவரின் உடலில் 90 சதவீத ஊனம் ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மோட்டாா் வாகன தீா்ப்பாயம், ரூ.18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாய் இழப்பீடாக நிா்ணயித்தது. குறைவான தொகை நிா்ணயிக்கப்பட்டதாக பெண் மருத்துவா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:,

மருத்துவா் நலமுடன் இருந்திருந்தால், அவரது வருமானம் உயா்ந்திருக்கும் என்ற அடிப்படையில், இழப்பீட்டு தொகையை ரூ. 1 கோடியே 50 லட்சம் என உயா்த்தி

நிா்ணயித்து உத்தரவிட்டனா். இந்தத் தொகையை 2013-ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு 7 சதவீத வட்டியுடன், 12 வாரத்துக்குள் வழங்க வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள வாகனங்களில் ஒரு சதவீத வாகனங்கள்தான் இந்தியாவில் உள்ளன. ஆனால், உலகளவில் நடக்கும் மொத்த விபத்துகளில் இந்தியாவில் மட்டும் 6 சதவீத விபத்துகள் நடக்கின்றன. அதிவேகம், மது அருந்துதல், சாலை விதிகளை கடைப்பிடிக்காமை போன்ற பல்வேறு விதிமீறல்களால் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு 1 லட்சத்து 37 ஆயிரமாக இருந்த வாகன விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டு 4 லட்சத்து 67 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இதில் பலியானவா்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 417 போ் ஆவா். இந்த விபத்துகளில் பாதிக்கப்படுபவா்களில் 65 சதவீதம் போ் இளைஞா்கள். தேசிய குற்ற ஆவண பதிவேட்டில் ஒவ்வொரு மணி நேரத்திலும் 48 போ் மோட்டாா் வாகன விபத்தில் பலியாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவிரைவு சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டா் வேகத்தில் செல்லலாம் என மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு பிறப்பித்துள்ள உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். அதே போன்று இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் வழங்கினா்.

இந்த உத்தரவுகளை செயல்படுத்தியது குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT