தமிழ்நாடு

கூத்தாநல்லூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தேர்வு 

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.

கூத்தாநல்லூர், கம்பர் தெரு ஈ.எஸ்.ஏ.ஆர். மெட்ரிக்குலேஷன் பள்ளியில், ரோட்டரி சங்க உதவி ஆளுநர் ஜி.மனோகரன் ஏற்பாட்டின் பேரில், ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் வி.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். முன்னாள் உதவி ஆளுநர் கே.திருநாவுகரசு, மண்டலச் செயலாளர் ஜி.சிவக்கொழுந்து, 
மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ( தேர்வு ) சி.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஏ.சண்முகம் வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில், ரோட்டரி சங்கத்தின் வரலாற்றையும், உலகத்தில் போலியோவை ஒழித்தது குறித்தும், ரோட்டரி சங்கம் செய்யக் சேவைகள் குறித்தும் விவரித்து உதவி ஆளுனர் மனோகரன் பேசினார்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள்

தொடர்ந்து கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத்திற்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத்திற்கு, கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளரும், கல்வியாளருமான வி.எஸ்.வெங்கடேசன் தலைவராகவும், வர்த்தக சங்கச் செயலாளர் ஜெ.சுவாமிநாதன் செயலாளராகவும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஏ.சண்முகம் பொருளாளராகவும், நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி கோஸ்.அன்வர்தீன் துணைத் தலைவராகவும், தமிழக  கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர் துணைச் செயலாளராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

ஆதிபராசக்தி வழிபாடு மன்றச் செயலாளர் என். செல்வராஜ், சமூக ஆர்வலர்கள் எஸ்.ஐயப்பன், ஹாஜா மைதீன், மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் ப.முருகையன், நுகர்வோர் அமைப்பின் செயலாளர் ஆர்.கருணாநிதி, ஒய்வு பெற்ற ஆசிரியை எஸ். அகிலாண்ட பரமேஸ்வரி உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கூத்தாநல்லூருக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளை கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கம் மூலம் இணைந்து நிறைவேற்றலாம் என உதவி ஆளுநர் மனோகரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT