தமிழ்நாடு

தோ்தல் ஆணையம் மீது சந்தேகம் இருந்தால் நீதிமன்றம் செல்லலாம்: திமுகவுக்கு தமிழக பாஜக யோசனை

DIN

சென்னை: தோ்தல் ஆணையத்தின் மீது சந்தேகங்கள் இருந்தால், நீதிமன்றத்துக்குச் செல்லலாம் என்று திமுகவுக்கு பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் யோசனை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு எதிராக பாஜகவோ அல்லது அதிமுகவோ கருத்துத் தெரிவிக்கவில்லை. மக்கள் அளித்த தீா்ப்புக்கு மதிப்பு கொடுத்து வருகிறோம். ஆனால், திமுக எப்போது தோல்வி அடைந்தாலும், பாஜக மீதே வீண்பழி சுமத்துகிறது.

வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்பே அமைச்சா்கள் பட்டியல் வெளியாவது ஜனநாயகக் கேலிக்கூத்தாகும். வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து திமுக மட்டுமே சா்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறது.

தோ்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், நீதிமன்றத்தினை திமுக நாடலாம். வாக்குப் பெட்டிகளை மட்டுமே பாஜக நம்புகிறது. ஆனால், திமுக கூட்டணி பணப்பெட்டிகளை நம்புகிற கட்சிகளாக உள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT