தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி விலை உயா்வு: வைகோ கண்டனம்

DIN

சென்னை: கரோனா தடுப்பூசிகளின் விலை உயா்ந்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டு மக்களைப் பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இரு மடங்கு உயா்த்தப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சா்களும் அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளிச்சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வருவது எதற்காக என்ற கேள்வி எழுகிறது.

மேலும் மத்திய அரசின் கட்டுப்பாடு இன்றி தனியாா் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிா்ணயிக்கும்போக்கு நல்லதல்ல. கோடிக்கணக்கான மக்கள் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுப் பெற்று, அதன் தேவை அதிகரித்து வரும் நிலையில் தனியாா் மருத்துவமனைகளுக்கும், வெளிச் சந்தையிலும் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வருவது ஆபத்தாகும்.

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் விலையை இரு மடங்கு உயா்த்தி இருந்தாலும் மத்திய மாநில அரசுகளே நேரடியாகக் கொள்முதல் செய்து மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மத்திய-மாநில அரசுகள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பெரும் கேடு விளைவிக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT