தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா மனு

DIN

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கக் கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் இக்கட்டான சூழ்நிலையில் , மக்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம், நீதிமன்றம் அனுமதி வழங்கினால் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் உற்பத்தியை தயாரித்து எங்களால் இலவசமாக வழங்க முடியும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும் கடந்த 2018 முதல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதைய கரோனா பேரிடர் சூழ்நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கான இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. விரைவில் இந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT