தமிழ்நாடு

தமிழகத்தில் உற்பத்தியான ஆக்ஸிஜன் ஆந்திரம், தெலங்கானாவுக்கு அனுப்பி வைப்பு

21st Apr 2021 01:09 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை விட தமிழகத்தில் கரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதால், இங்கு ஆக்ஸிஜன் தேவையும் அதிகமாக இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 79,800 கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். ஆனால் ஆந்திரத்தில் 53 ஆயிரமும், தெலங்கானாவில் 42 ஆயிரம் நோயாளிகளும் உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது மருத்துவத் தேவைக்காக நாள் ஒன்றுக்கு 200 மெட்ரிக் கடன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில், நாள் ஒன்றுக்கு இந்த ஆலையில் 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகளும் விளக்கம் அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆனால் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஏப்ரல் இறுதியில் தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 450 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்காக, மத்திய அரசிடமிருந்து கூடுதலாக ஆக்ஸிஜன் தமிழகத்துக்கு விரைவில் வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே வேளையில், மாநில அரசின் கருத்தைக் கேட்காமல், மத்திய அரசே, 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்பியிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், ஆங்கில செய்தி ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் கேட்கப்படும் என்றும் அவர் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : Tamil nadu Andhra Pradesh Telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT